தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நுால் வெளியீடு

நுால் வெளியீடு

நுால் வெளியீடு


UPDATED : ஜூன் 21, 2026 10:47 PM

ADDED : ஜூன் 21, 2026 10:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2026 10:47 PM ADDED : ஜூன் 21, 2026 10:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் சின்மயானந்தம் எழுதிய கம்யூனிசம் அறிய வேண்டிய அறிவியல் நூல் வெளியீட்டு விழா நடந்தது.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மதுரை, சிந்திப்போம் செயல்படுவோம் இயக்கம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு, அனைத்திந்திய நாடகப் பெருமன்ற மாநிலத் துணைச் செயலாளர் அழகுபாரதி தலைமை வகித்தார், கலை இலக்கியப் பெருமன்ற மாநிலக் குழு உறுப்பினர் கவிஞர் முத்தையா வரவேற்றார். மதுரை புரட்சி பாவலர் மன்ற தலைவர் வரதராஜன் நூலினை வெளியிட, மதுரை நட்பு தமிழ் வட்டம் பொருளாளர் ஆசைத்தம்பி பெற்றார்.

இந்திய கம்யூ., மாநிலக் குழு உறுப்பினர் காளிதாஸ் முன்னிலை வகித்தார். கலை இலக்கியப் பெருமன்ற மாநிலத் துணைச் செயலாளர் ஆனந்தகுமார் நுால் மதிப்புரை செய்தார். மாவட்டத் தலைவர் கவிஞர் செல்லா, முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் பசுமலைபாரதி பங்கேற்றனர். அறிவானந்தம் நன்றி கூறினார். கவிஞர்கள் கிறிஸ்டோபர், மஞ்சுளா, பேராசிரியர்கள் தமிழரசன், பாண்டி ஏற்பாடு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us