UPDATED : ஜூன் 21, 2026 10:51 PM
ADDED : ஜூன் 21, 2026 10:31 PM
அ நிறம் | அளவு
பேரையூர்:மழைக்காலத்தையொட்டி பேரையூர் பேரூராட்சியின் 15 வார்டுகளிலும் ஒட்டுமொத்த தூய்மை பணி நடந்தது.
மேற்பார்வையாளர் கவிதா தலைமையில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் அனைத்து வார்டுகளிலும் தேங்கிய குப்பையை அகற்றினர். மக்கும் மக்காத குப்பையைத் தரம் பிரித்து உரக்கிடங்குக்கு அனுப்பி வைத்தனர். முக்குசாலையில் இருந்து பஸ் நிலையம் வரை உள்ள கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்தனர்.
