நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கலைஞர் நுாலகத்தில் நுாலக வார விழா, குழந்தைகள் தின விழா முதன்மை நுாலகர் தினேஷ் குமார் தலைமையில் நடந்தது.
குழந்தைகளின் நுால் விமர்சனம், மேடைப் பேச்சு, கட்டுரை ஏழுதுதல், கிராமிய நடனம் உள்ளிட்டவை நடந்தன. 8 மாநகராட்சி பள்ளிகள் உட்பட 10 பள்ளிகளில் இருந்து 152 மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவர்களிடையே வாசிக்கும் பண்பை வளர்த்து, அறிவுத்திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், திருப்பாலை ஜெயின் வித்யாலயா பள்ளியின் 155 மாணவர்கள் ஒரே நாளில் உறுப்பினர்களாக இணைந்தனர். பள்ளி முதல்வர் விஜயகுமாரி, தலைமை நிர்வாகி ராஜேஷ் வோரா, நுாலகர்கள் செல்வி, சரிதா, தங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

