ADDED : பிப் 05, 2026 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பாத்திமா நகர் ஜீவகலேஷ் 11. நேற்று மாலை தன் தாயுடன் டூவீலரில் பின்னால் அமர்ந்து அரசரடியில் காளவாசல் நோக்கி சென்றார். சிக்னல் அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த மினி பஸ் மோதியதில் தாய், மகன் காயமடைந்தனர்.
அவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி, வலிப்பு நோய் காரணமாக சிறுவன் இறந்தான். வழித்தட அனுமதியில்லாத அந்த மினி பஸ்சை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

