/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காஷ்மீர் தாக்குதலுக்கு பிராமண சமாஜம் கண்டனம்
/
காஷ்மீர் தாக்குதலுக்கு பிராமண சமாஜம் கண்டனம்
ADDED : ஏப் 24, 2025 04:48 AM
மதுரை:  ஜம்மு- காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் ஹரிஹர முத்தையர் அறிக்கை:
ஜம்மு- காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறோம். நாடெங்கும் அமைதி நிறைந்திருக்க வேண்டிய நேரத்தில் இவ்வாறு  அப்பாவி உயிர்களை கொன்று குவிக்கும் கொடூரமான வன்முறையை பொறுத்துக்கொள்ள முடியாது. நம் சகோதரர்களின் ரத்தம் வீணாக கொட்டியது. அவர்களின் குடும்பங்கள் சிதைந்தன. இது சாதாரணமான செயல் அல்ல. நம்நாட்டின் அமைதியையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளது.
தமிழ்நாடு பிராமண சமாஜம் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறது. நம்நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, இத்தகைய தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயங்கரவாத தாக்குதலால் இந்த மண் மீது விழும் ஒவ்வொரு குடிமகனின் ரத்த துளிக்கும், கண்ணீருக்கும் நியாயம் கோருவோம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

