/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வலிப்பு நோய்க்கு மூளையை பிரித்து ஆப்பரேஷன்; அப்போலோ மருத்துவர்கள் அரிய சாதனை
/
வலிப்பு நோய்க்கு மூளையை பிரித்து ஆப்பரேஷன்; அப்போலோ மருத்துவர்கள் அரிய சாதனை
வலிப்பு நோய்க்கு மூளையை பிரித்து ஆப்பரேஷன்; அப்போலோ மருத்துவர்கள் அரிய சாதனை
வலிப்பு நோய்க்கு மூளையை பிரித்து ஆப்பரேஷன்; அப்போலோ மருத்துவர்கள் அரிய சாதனை
UPDATED : பிப் 22, 2024 05:12 PM
ADDED : பிப் 22, 2024 06:49 AM

மதுரை : வலிப்பு நோயால் பெரும் பாதிப்புக்குள்ளான சிறுமியின் மூளையில் அரிய ஆப்பரேஷன் செய்து மதுரை அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் சாதித்துள்ளனர்.
மதுரை அப்போலோ மருத்துவமனை மூளை நரம்பியல் நிபுணர்கள் மீனாட்சி சுந்தரம், ஷ்யாம் கூறியதாவது: மூளையில் இருந்து தேவையற்ற நேரத்தில் கை, கால்களுக்கு மின்சாரம் செல்வதை வலிப்பாக அறிகிறோம். மூளையில் கட்டி, கிருமி, அடிபடுதல் போன்றவற்றால் வலிப்பு வரலாம். பாதிப்பில் உள்ளோரில் 70 சதவீதத்தினர் தினமும் ஒரு மாத்திரை,. 25 சதவீதம் பேர் 2 அல்லது 3 மாத்திரைகள் எடுப்பவராக இருக்கலாம். அதற்கு மேல் தேவைப்பட்டால் ஆப்பரேஷன் தேவை.
மதுரை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி வலிப்பு நோயால் தினமும் 10 முதல் 15 முறைகூட கீழே விழுந்து அடிபடுவார். இதனால் அச்சிறுமியின் எல்லா செயல்பாடுகளும் பாதித்தன. அப்போலோவுக்கு வந்த அவரை பரிசோதனை செய்ததில் ஆப்பரேஷன் தேவைப்பட்டது. அவரது மூளையின் இடது பகுதியில் இருந்து வலது பகுதிக்கு தேவையற்ற வகையில் 'மின்சாரம்' பாய்ந்ததால் பாதிப்பு இருந்தது. அவரது மூளையை 2 ஆக பிரிக்க முடிவு செய்தோம். அவருக்கு மயக்கமருந்து கொடுப்பது, ஆப்பரேஷனுக்கு பின் கை, கால் செயலிழப்பு, பேச்சு இழப்பு ஏற்படும் என்ற சவால்கள் இருந்தன. அவருக்கு 'கார்லஸ் கலாஸ்டோமி' என்ற 6 மணி நேர ஆப்பரேஷன் வெற்றிகரமாக நடந்தது. அதன்பின் 3 மாதங்களாக அவருக்கு வலிப்பு உட்பட எந்த பாதிப்பும் இல்லை.
வலிப்பு வரும் கால இடைவெளி, மாத்திரை அளவை குறைப்பதுகூட சிறப்பான சிகிச்சையே. இச்சிறுமிக்கு மீண்டும் வலிப்பு வரவில்லை என்பதால் குணமடைந்ததாக கொள்ளலாம். வலிப்பு நோய் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை என்றனர்.
நிகழ்ச்சியில் அப்பல்லோ தலைமை செயல் அலுவலர் நீலகண்ணன், இணை இயக்குனர் பிரவீன்ராஜன், டாக்டர்கள் கார்த்திக், சுந்தரராஜன், நிஷா, கெவின், பொதுமேலாளர் மணிகண்டன் பங்கேற்றனர்.