/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காலை உணவு விரிவாக்க திட்டம் மதுரையில் 22 ஆயிரம் பேர் பயன்
/
காலை உணவு விரிவாக்க திட்டம் மதுரையில் 22 ஆயிரம் பேர் பயன்
காலை உணவு விரிவாக்க திட்டம் மதுரையில் 22 ஆயிரம் பேர் பயன்
காலை உணவு விரிவாக்க திட்டம் மதுரையில் 22 ஆயிரம் பேர் பயன்
ADDED : ஆக 26, 2025 04:08 AM
மதுரை: மதுரை மாவட்டத்தில் துவங்கும் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தில் மேலும் கூடுதலாக 22 ஆயிரத்து 857 மாணவர்கள் பயன்பெறுவர்.
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான துவக்க விழா இன்று நடக்கிறது. மதுரை மாவட்டத்தில் இத்திட்டத்தில் ஏற்கனவே 1165 பள்ளிகளைச் சேர்ந்த 60 ஆயிரத்து 574 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
இதில் மதுரை மாநகராட்சி பள்ளிகள் 74, மேலுார், திருமங்கலம், உசிலம்பட்டி நகராட்சிகளின் 12 பள்ளிகள், 13 ஒன்றியங்களில் 950 பள்ளிகள், ஊரக பகுதிகளில் உள்ள உதவி பெறும் பள்ளிகள் 89 ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் பலன்பெறுகின்றனர்.
இந்நிலையில் இத்திட்டம் மேலும் நகர்ப்புற பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 99 மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 16 ஆயிரத்து 544 பேர், மூன்று நகராட்சிகளின் 20 பள்ளிகளில் பயிலும் 4661 மாணவர்கள், பேரூராட்சிகளில் உள்ள 12 பள்ளிகளின் 1652 மாணவர்கள் என மொத்தம் 131 பள்ளிகளைச் சேர்ந்த 22 ஆயிரத்து 857 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.
மதுரை மாவட்டத்தில் இத்திட்டத்தை அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் ஆகியோர் இன்று துவக்கி வைக்க உள்ளனர்.