ADDED : செப் 24, 2026 06:13 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார் ஒன்றியத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2,741 மாணவர்கள் படிக்கின்றனர்.
இம் மாணவர்களுக்கு 32 மையங்களில் காமராஜர் காலை உணவு திட்டம் சருகு வலையயபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் துவங்கப்பட்டது. திட்டத்தை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தொகுதி அலுவலர் பிரகலாதன் துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் சுல்தான் அப்துல்லா, பி.டி.ஓ., ராமமூர்த்தி பங்கேற்றனர்.
