தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ காற்றில் சாய்ந்த மின் கம்பங்கள்

காற்றில் சாய்ந்த மின் கம்பங்கள்

காற்றில் சாய்ந்த மின் கம்பங்கள்


ADDED : செப் 24, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 06:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: திருமங்கலம் கணபதி நகர் பகுதியில் இருந்து அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் ரோட்டில் அரசு மாணவர் விடுதி உள்ளது. இந்த பகுதியில் நேற்று முன்தினம் மாலை வீசிய பலத்த காற்றால், விடுதி சுற்றுச்சுவர் அருகே இருந்த மரம் வேரோடு சாய்ந்தது. அருகில் இருந்த மின் கம்பமும் இரண்டாக உடைந்து சாய்ந்தது.

இதனால் கணபதி நகர் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் உடனே நடவடிக்கை எடுத்து மின் கம்பம் மேலும் கீழே விழாமல் தடுத்து நிறுத்தினார். இதனால் முன்தினம் இரவு முதல் நேற்று காலை 10:00 மணி வரை கணபதி நகர் பகுதியில் மின்சாரம் இல்லை.

மின்கம்பம் நடுரோட்டில் உடைந்து விழுந்து இருந்ததால் அந்த வழியாக செல்லும் மாணவர்கள் பொதுமக்கள் நீண்ட துாரம் சுற்றிச் சென்று அவதிக்கு ஆளாகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us