நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை சார்பில் உலக தாய்ப்பால் விழா நடந்தது. கல்லுாரி செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். மாணவி ஐஸ்வர்யா வரவேற்றார்.
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பைரவி பேசினார். துறைத் தலைவர் கோபி மணிவண்ணன் ஒருங்கிணைத்தார். தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு போஸ்டர், குறும்படம் வெளியிடப்பட்டது. பேச்சு, கட்டுரை உட்படபல போட்டிகள் நடத்தப்பட்டது. பேராசிரியர் ராஜேஸ்வரி நடுவராக பணியாற்றினார்.