ADDED : மார் 01, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் மார்ச் 3ல் மூச்சு பயிற்சி வகுப்பு நடக்கிறது.
தெப்பக்குளம் டாக்டர் கோகுல்நாத் நர்சிங் ேஹாம் வளாகத்தில் காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடக்கும் இவ்வகுப்பில் மூச்சின் வேகத்தை பரிசோதித்தல், மூச்சின் மூன்று நிலை பயிற்சி, பிராணாயாமம் கற்றுத்தரப்படும். சுவாசப் பிரச்சினைகள், உடல் வலிகள், அழற்சி, மூச்சிறைப்பு, மன அழுத்தம், துாக்கமின்மை போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். முன்பதிவுக்கு இயக்குநர் கங்காதரனை 94875 37339ல் தொடர்பு கொள்ளலாம்.

