/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
செங்கல் சூளைகள் சுறுசுறுப்பு தொழிலாளர்கள் மகிழ்ச்சி
/
செங்கல் சூளைகள் சுறுசுறுப்பு தொழிலாளர்கள் மகிழ்ச்சி
செங்கல் சூளைகள் சுறுசுறுப்பு தொழிலாளர்கள் மகிழ்ச்சி
செங்கல் சூளைகள் சுறுசுறுப்பு தொழிலாளர்கள் மகிழ்ச்சி
ADDED : ஜன 07, 2025 05:11 AM

பேரையூர்: பேரையூர் தாலுகாவில் முக்கிய தொழில்களில் ஒன்றான செங்கல் சூளைத் தொழில் தொடர் மழை காரணமாக இரண்டு மாதங்களாக பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது மழை இல்லாததால் செங்கல் தொழில் சுறுசுறுப்பு அடைந்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பேரையூர், சாப்டூர், வண்டாரி, நாகையாபுரம், சிலைமலைப்பட்டி, கீழப்பட்டி, மல்லபுரம், எம்.கல்லுப்பட்டி, எழுமலை பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. தொடர் மழையால் சுடாத செங்கற்களை வெயிலில் காய வைக்க முடியாமல் தொழிலில் முடக்கம் ஏற்பட்டது. இதனால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வெயில் அடிப்பதால் மீண்டும் தொழில் சுறுசுறுப்படைந்துள்ளது. தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.