/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு தட்டுப்பாடால் விலை உயர்வு
/
மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு தட்டுப்பாடால் விலை உயர்வு
மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு தட்டுப்பாடால் விலை உயர்வு
மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு தட்டுப்பாடால் விலை உயர்வு
ADDED : டிச 14, 2024 06:39 AM
பேரையூர: பேரையூர் தாலுகாவில் தொடர்மழை காரணமாக செங்கல் சூளை தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பேரையூர், சாப்டூர், வண்டாரி, நாகையாபுரம், சிலைமலைப்பட்டி, கீழப்பட்டி, மள்ளபுரம், எம்.கல்லுப்பட்டி, ஏழுமலை பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. தொடர் மழை காரணமாக செங்கல் சூளைகள் முடங்கியுள்ளன.
சுடாத செங்கற்களை வெயிலில் காய வைக்க முடியாததால், பல சூளைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் செங்கல் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது.
தொடர் மழையால் செங்கல்களை காய வைக்க முடியாமலும், காய வைக்கும் செங்கல்கள் மழையில் கரைந்து விடுவதாலும் உற்பத்தியாளர்கள் தவிக்கின்றனர். இதனால் வேலை வாய்ப்பு குறைந்ததுடன் தொழில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
உற்பத்தியாளர்கள் கூறியதாவது: மழையால் 20 நாட்களாக செங்கல் உற்பத்தியை நிறுத்தி விட்டோம். விற்பனையும் குறைவாகத்தான் இருந்தது. இதனால் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை. உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டதால், செங்கல் விலை உயர துவங்கி உள்ளது. ஆயிரம் கல் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரத்து 500 வரை உயர்ந்துள்ளது.
மழை குறைந்தால் மீண்டும் உற்பத்தியை தொடங்கலாம் எனக் கருதுகிறோம் என்றனர். தொழில் பாதிப்பால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.