/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கைப்பிடிச்சுவர் இல்லாத பாலத்தால் விபத்து அபாயம்
/
கைப்பிடிச்சுவர் இல்லாத பாலத்தால் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 15, 2025 03:46 AM

மதுரை: மதுரை செல்லுார் - குலமங்கலம் ரோட்டில் மீனாம்பாள்புரம்அருகேஉள்ள பாலம், கைப்பிடிச்சுவர் இன்றி பாதசாரிகளுக்குஆபத்தான வகையில் உள்ளது.
இப்பாலம் ஆனையூர், குலமங்கலம், வாகைகுளம் பகுதிகளுக்கு செல்லும் ரோட்டில் உள்ளது. இப்பாலத்தை தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. பாலத்தின் ஒருபக்கம்கனரக வாகனங்கள், குப்பை தொட்டிகளால் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பாலத்தின் அகலம் சுருங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குப்பைத் தொட்டிகள் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. பாலத்தின் கீழ்ப்பகுதியில் குப்பை கொட்டி தீவைக்கின்றனர். இதனால் கைப்பிடிச் சுவர்கள் சேதமடைந்து, பாலம் வலுவிழந்ததுடன்,அருகிலுள்ள வேப்ப மரமும் பாதித்துள்ளது. தெருவிளக்கு வெளிச்சம் குறைவாக உள்ளதால் இரவில்விபத்துகள் நடக்கின்றன.பாலத்தில் ஹாலோ பிளாக் கற்களால் கைப்பிடிச்சுவர் அமைக்க திட்டமிட்டனர். 2 மாதங்களாகியும் பணிகள் துவங்காததால் ரோட்டோரம்வைத்திருந்த ஹாலோ பிளாக் கற்களை எடுத்துச் சென்றுவிட்டனர்.
நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் அபுபக்கர் கூறுகையில், ''பாலத்தில் உள்ள குப்பை தொட்டிகளை வேறிடத்தில் வைக்க வேண்டும். பாலத்தை சீரமைக்க வேண்டும். மின்கம்பிகளுக்காக ஆலமரக் கிளைகள் வெட்டப்படுவதை தவிர்க்க ஹைமாஸ் விளக்கு உள்ள இடத்தில் புதிய மின்ம்பம் அமைக்க வேண்டும்'' என்றார்.