/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிரிட்டனிலிருந்து கொண்டுவரப்பட்ட திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலை
/
பிரிட்டனிலிருந்து கொண்டுவரப்பட்ட திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலை
பிரிட்டனிலிருந்து கொண்டுவரப்பட்ட திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலை
பிரிட்டனிலிருந்து கொண்டுவரப்பட்ட திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலை
ADDED : மார் 06, 2026 11:51 AM

நமது நிருபர்
பிரிட்டனிலிருந்து திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலை கொண்டுவரப்பட்டது என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அவரது அறிக்கை: தமிழகத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட திருமங்கை ஆழ்வாரின் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கலச் சிலை பிரிட்டனிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு , அந்த சிலைக்குரிய சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் மீண்டும் நிறுவப்பட இருப்பதற்கான செய்தியறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பிரதமர் மோடியின் உறுதியான ,தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தலைமைக்கான மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளது.
திருமங்கை ஆழ்வார், மிகவும் போற்றப்படும் ஆழ்வார்களில் ஒருவர். இவரது பக்திப் பாடல்கள் 'நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின்' ஒரு முக்கிய அங்கமாகும். அவரது புனிதமான சிலை தமக்கே உரிய இடத்திற்கு மீண்டும் திரும்புவது, பக்தர்களுக்கும் தமிழக மக்களுக்கும் அளவற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தொல்பொருட்களை திரும்பப்பெறும் முயற்சிகளை மத்திய அரசு செவ்வனே செய்து வருவது பாராட்டுக்குரியது.
2014ம் ஆண்டு முதல் 600க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. தற்போது, திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையுடன் சேர்த்து மேலும் நான்கு பழங்கால சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. இது, பண்பாட்டு மீட்டுருவாக்கத்திலும், கலைப் பொக்கிஷங்களைப் பேணிப் பாதுகாப்பதிலும் அரசுக்கு இருக்கும் உறுதியைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை உள்ளிட்ட தொல்பொருட்கள் மீட்கப்பட உறுது ணையாக இருந்த அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

