ADDED : ஜூன் 21, 2025 03:38 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் சேதமடைந்த சாக்கடையை மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
சேது: கடந்தாண்டு உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவுபடி நுாற்றுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் அகற்றப்பட்டன.அப்போது இங்கிருந்த சாக்கடை முழுமையாக சேதம் அடைந்தது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்குகிறது.துர்நாற்றம் அடிப்பதோடு நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. தேங்கியிருக்கும் கழிவுநீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் மக்கள் சிரமமடைகின்றனர்.
தற்போது சாக்கடை இருக்கும் பகுதி மேடுபள்ளமாக இருப்பதால் மாற்றத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் அடிக்கடி தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர்.மழைக்காலங்களில் தண்ணீர் சாக்கடையில் செல்லாமல் சாலையில் செல்கிறது. பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.