ADDED : அக் 21, 2026 07:00 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வேளாண் கல்லுாரி வைரவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் மாணவர் சங்க மதுரை கிளை சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கும் விடுதி கட்டட திறப்பு விழா நடந்தது.
கல்லுாரி டீன் ராகவன், சமுதாய அறிவியல் கல்லுாரி டீன் காஞ்சனா தலைமை வகித்தனர். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் திறந்து வைத்தார். துணைத்தலைவர் மோகன், செயலாளர் தவசுமுத்து, பொருளாளர் ஜேசுராஜா, நிர்வாகிகள் ஸ்ரீகுமார், நாயர், மணிசேகரன், பேராசிரியை சந்திராமணி கலந்து கொண்டனர்.
