/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'பில்டிங் ஸ்ட்ராங்கு'... 'பேஸ்மென்ட் வீக்கு'...
/
'பில்டிங் ஸ்ட்ராங்கு'... 'பேஸ்மென்ட் வீக்கு'...
ADDED : ஜன 05, 2026 05:42 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே வடகாடுபட்டியில் சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியின் அடிப்பகுதியை சீரமைக்க வேண்டுமென அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
இங்கு பெருமாள் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ரேஷன் கடை அருகே பழைய மேல்நிலை குடிநீர் தொட்டி அமைந்துள்ளது. சேதமடைந்ததாலும் தேவை அதிகரித்ததாலும் இதன் அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. போதுமான பராமரிப்பின்றி தொட்டியிலிருந்து வெளியேறும் பைப் லைன்களில் ஓட்டை விழுந்து தண்ணீர் வெளியேறி அடிப்பகுதியில் தேங்குகிறது.
சுற்றிலும் செடி, கொடிகள் முளைத்து புதர் போன்று காட்சியளிக்கிறது. மேலும் குறுக்கு பீம்களில் காரைகள் பெயர்ந்து கம்பிகள் தெரிகின்றன. மேல்புறத்தொட்டி வலுவாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 'பேஸ்மென்ட்' வலுவிழந்து விபரீதம் நிகழ வாய்ப்புள்ளது. ஒன்றிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

