ADDED : டிச 30, 2024 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அப்பன்திருப்பதி : அப்பன்திருப்பதி அருகே நேதாஜி பிறந்த நாளை முன்னிட்டு நேதாஜி மக்கள் இயக்கம் சார்பில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடந்தது.
அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். அழகர்கோவில் ரோட்டில் பூண்டி விலக்கு முதல் சத்திரப்பட்டி பிரிவு வரை பந்தயம் நடந்தது. பெரிய மாடுகளுக்கு 12 கி.மீ., துாரம், சிறிய மாடுகளுக்கு 10 கி.மீ., துாரம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் நாற்பது மாடுகள் பங்கேற்றன.
முதல் மூன்று இடங்களை வென்ற மாடுகளுக்கு பெரிய மாடு பிரிவில் ரூ. 25 ஆயிரம், ரூ. 20 ஆயிரம், ரூ. 17 ஆயிரம், சிறிய மாடு பிரிவில் ரூ. 20 ஆயிரம், ரூ. 15 ஆயிரம், ரூ. 10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டன.
சோழவந்தான்எம்.எல்.ஏ., வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர். இயக்கத்தின் மாவட்ட செயலாளர் இளவரசன் ஏற்பாடுகளை செய்தார்.