ADDED : ஆக 20, 2026 12:59 AM

அ நிறம் | அளவு
மேலுார்: அம்மன் கோவில்பட்டி வீரகாளியம்மன் கோயில் திருவிழாவில் அடஞ்சான் கண்மாய் பட்டி, சக்கரை பீர் மலைப்பட்டி கிராமம் சார்பில் மாட்டு வண்டிப் பந்தயம் நடந்தது.
பெரிய மாடு பந்தயத்தில் 16 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் குலமங்கலம் திருப்பதி, மேலூர் அழகன் கவுசிக், குமாரப்பட்டி விஷால் கண்ணன் மாடுகள் முதல் 3 பரிசுகளை வென்றன.
சிறிய மாடு பந்தயத்தில் 34 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் ஆட்டுக்குளம் பாபு, கள்ளந்திரி பாலா அதிரன் முதல் பரிசு, காரைக்குடி சிவா, திண்டுக்கல் மோகன்ராம் இரண்டாம் பரிசு, சுண்ணாம்புயிருப்பு ராஜா முடி, மேலுார் அழகன் கவுசிக் மாடுகள் மூன்றாம் பரிசை வென்றன.
