ADDED : பிப் 03, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வடக்கு மாவட்டம் மாத்துாரில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி முதல்முறையாக இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடந்தது.
நிர்வாகி விஜய் அன்பன் தலைமை வகித்தார். கல்லாணை முன்னிலை வகித்தார்.
நிர்வாகிகள் அலாவுதீன், தீபன் சக்கரவர்த்தி, பிரகாஷ், ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டிகள் என 70க்கும் மேற்பட்ட வண்டிகள் பங்கேற்றன.