ADDED : மார் 21, 2024 02:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: தெற்குப்பட்டியில் காஞ்சிவனம் சுவாமி, முளைக்கட்டு அம்மன் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பூஞ்சிட்டு பந்தயத்தில் 14 ஜோடி மாடுகள் பங்கேற்றன. இதில் மேல்மறை தங்கமணி, கூடலுார் காசி சாண்டிலியன், பரவை சின்னவேலம்மாள், பெரியசூரக்குண்டு கணேசன் மாடுகள் முதல் நான்கு பரிசுகளை வென்றன.
சின்னமாடு பந்தயத்தில் 9 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதில் மேல்ராங்கியம் அம்பலம், மேலுார் சிக்கி, பாண்டிகோவில் பாண்டிச்சாமி, செம்பனுார் பசும்பொன் பாலா மாடுகள் முதல் நான்கு பரிசுகளை வென்றன.

