ADDED : மார் 20, 2025 05:52 AM

மேலுார்: திருவாதவூர் திரவுபதை அம்மன் கோயில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
பெரிய மாடு பந்தயத்தில் 8 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதில் திருவாதவூர் தன்வந்த் பிரசாத், ஜெய்ஹிந்த்புரம் அக்னி முருகன், திருவாதவூர் பதினெட்டான், கள்ளந்திரி ஆனந்த் மாடுகள் முறையே முதல் நான்கு பரிசுகளை வென்றன.
நடு மாடு பந்தயத்தில் 15 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் டி.புதுப்பட்டி சிவபாலன், வெள்ளியங்குன்றம் பாலா, திருவாதவூர் தன்வந்த் பிரசாத், தேனி ராஜ்குமார் மாடுகள் முறையே முதல் 4 பரிசுகளை வென்றன.
சின்ன மாடு பந்தயத்தில் 31 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. தேனி வேத வர்ஷினி, டி .புதுபட்டி சிவபாலன் முதல் பரிசு, தேனி சரவணவேல், திருவாதவூர் ஜெயபாலகிருஷ்ணன் 2 ம் பரிசு, பாண்டி கோவில் பாண்டியராஜன், கள்ளந்திரி சிவபிரபு 3 ம் பரிசு, கிளாதிரி முனிச்சாமி, டி. பலையூர் அழகர் சரவணன் மாடுகள் 4 ம் பரிசை வென்றன.