ADDED : ஆக 21, 2024 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் ஊராட்சி ராயபாளையத்தில் இருந்து தினமும் மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சில நாட்களாக மாலையில் பெரியாரில் இருந்து ராயபாளையம் வரும் பஸ் தாமதமாக வந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து கண்டக்டர், டிரைவரிடம் பெண்கள் கேட்டபோது 'ஓசி பஸ் லேட்டாகதான் வரும்' என கிண்டலாக கூறினர். இதையறிந்த கிராமத்தினர் நேற்று காலை அரசு பஸ்சை சிறை பிடித்தனர். 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. அவர்களிடம் போக்குவரத்து மண்டல மேலாளர் தயாளகிருஷ்ணன், திருமங்கலம் டெப்போ மேலாளர் முத்துமணி பேச்சுவார்த்தை நடத்தினர். கண்டக்டர், டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

