நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்; கிடாரிப்பட்டி ஊராட்சி சாமி தோப்பில் கழிவுநீர் மற்றும் மழை நீர் தேங்கியது. அதனை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். கிராவல் மண்ணை கொண்டு பாதை அமைக்க முயற்சித்தனர். மணலை அள்ள ஆர்.ஐ., பவுன் பாண்டி பத்தாயிரம் கேட்பதாக கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பி.டி. ஓ., சுந்தரபாண்டி பாதை அமைத்து தருவதாக கூறியதை தொடர்ந்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதனால் மேலுார் - அழகர் கோவில் ரோட்டில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.