ADDED : அக் 21, 2026 05:14 PM
அ நிறம் | அளவு
மதுரை: திருச்சி மாவட்டம் அந்தநல்லுார் ராஜகோபால். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:ஸ்ரீரங்கம் அருகே பெட்டவாய்த்தலை சிறுகமணியில் உள்ள பஸ் ஸ்டாண்டிற்கு அண்ணா பஸ் ஸ்டாண்ட் என்ற பெயரை மாற்றி, காமராஜர் பெயர் சூட்டப்பட்ட பலகை இடம்பெற்றுள்ளது. அதை அகற்றி மீண்டும் அண்ணா பெயரை சூட்ட நடவடிக்கை கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு,‛இதை பொதுநல மனுவாக கருத முடியாது. தள்ளுபடி செய்யப்படுகிறது,’ என உத்தரவிட்டது.
