/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பஸ் நிறுத்தம்: தினமும் 3 கி.மீ., நடை
/
பஸ் நிறுத்தம்: தினமும் 3 கி.மீ., நடை
ADDED : மார் 05, 2024 05:09 AM
திருப்பரங்குன்றம், : மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து 5டி அரசு டவுன் பஸ் திருப்பரங்குன்றம், கூத்தியார்குண்டு வழியாக கருவேலம்பட்டிக்கு இயக்கப்பட்டது. தற்போது கூத்தியார்குண்டு, கருவேலம்பட்டி இடையேயுள்ள ரயில்வே தண்டவாளப் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடப்பதால் அரசு டவுன் பஸ் ரயில்வே கேட் வரை இயக்கப்படுகிறது.
இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள், கைக்குழந்தை வைத்திருப்பவர் கருவேலம்பட்டிக்கு 3 கி.மீ., நடந்து செல்லும் நிலை உள்ளது. அந்த டவுன் பஸ்சை கப்பலுார் பாலம் வழியாக ஐ.ஓ.சி., முன்புள்ள சாலை வழியாக கருவேலம்பட்டி வரை இயக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் நாம் தமிழர் கட்சி கிளை செயலாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர்.

