/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆக்கிரமிப்புகளால் பஸ்ஸ்டாப் இன்றி அவதி
/
ஆக்கிரமிப்புகளால் பஸ்ஸ்டாப் இன்றி அவதி
ADDED : நவ 03, 2025 04:30 AM

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் முடுவார்பட்டியில் ஆக்கிரமிப்புகளால் பஸ் ஸ்டாப் வசதியின்றி பயணிகள் சிரமப்படுகின்றனர்.
இந்த ஊராட்சியில் வி.ஏ.ஓ., ஆர்.ஐ., அலுவலகம் துவங்கி வெள்ளையம்பட்டி ரோட்டில் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. ஊராட்சி பள்ளி அருகே 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஓட்டு கட்டட பஸ் ஸ்டாப் சில ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்து விழுந்தது.
பஸ் ஸ்டாப் இடத்தில் அடுத்தடுத்து அமைக்கப்பட்ட கட்சிக் கொடி கம்பங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டன. இருப்பினும் கொடிக்கம்பம் இருந்த கட்டடங்கள் அகற்றப்படவில்லை.
பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில், மழைக்கு ரோட்டோர கடை வாசல்களில் காத்திருக்கின்றனர்.
காங்., வட்டார தலைவர் காந்திஜி கூறுகையில், ''ஊராட்சி நிர்வாகம் பஸ் ஸ்டாப் கட்ட 2 முறை அளவீடு செய்தும் பணியை துவங்கவில்லை. பள்ளி நுழைவு பகுதி மற்றும் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி பஸ் ஸ்டாப் கட்ட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

