/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாவட்டம் தோறும் ஓய்வூதியர் இல்லம் பா.ஜ., வலியுறுத்தல்
/
மாவட்டம் தோறும் ஓய்வூதியர் இல்லம் பா.ஜ., வலியுறுத்தல்
மாவட்டம் தோறும் ஓய்வூதியர் இல்லம் பா.ஜ., வலியுறுத்தல்
மாவட்டம் தோறும் ஓய்வூதியர் இல்லம் பா.ஜ., வலியுறுத்தல்
ADDED : நவ 03, 2025 04:31 AM
மதுரை: 'மாவட்டந்தோறும் ஓய்வூதியர்களுக்கு பாதுகாப்பு இல்லங்களை துவக்க வேண்டும்' என பா.ஜ.,வின் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவினர் தீர்மானம் நிறைவேற்றினர்.
மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பிரிவு மாவட்ட ஆலோசனை கூட்டம் தலைவர் பரமசிவம் தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் கோபால், திருப்பரங்குன்றம் நகர் மண்டல் தலைவர் வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.
மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். மாவட்ட நிர்வாகிகள் வடிவேல் சரவணன், ராஜமோகன், அக்கினிராஜ் கதிரேசன் உட்பட பலர் வழிமொழிந்து பேசினர். மத்திய அரசு எட்டாவது ஊதியக்குழு நியமனம் செய்துள்ளதற்கு நன்றி தெரிவிப்பது, தமிழக அரசு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும்.
மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ்வசதி அளிக்க வேண்டும். மாவட்டந்தோரும் ஓய்வூதியர் பாதுகாப்பு இல்லங்கள் உருவாக்க வேண்டும். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் போராட்டங்களை நடத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

