ADDED : ஜூலை 23, 2025 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி; வாடிப்பட்டி பேரூராட்சி குலசேகரன் கோட்டையில் மகளிர் சுகாதார வளாகம் புதர் மண்டி உள்ளது.
2011ல் ரூ.3 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. பின் மோட்டார் பழுது உள்ளிட்ட காரணங்களால் பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக பயன்பாடின்றி விடப்பட்டது.
2019ல் துாய்மை பாரத இந்தியா திட்டத்தில் ரூ.11.76 லட்சத்தில் இதனருகே மீண்டும் ஒரு மகளிர் புதிய சுகாதார வளாகத்தை அதிகாரிகள் கட்டினர்.
பழைய சுகாதார வளாக கட்டடம் கருவேல மரங்கள் சூழ்ந்து புதர் மண்டியுள்ளது. அரசு நிதி வீணடிக்கபட்டு விஷ ஜந்துக்களின் வசிப்பிடமாக மாறி உள்ளது. பயன்பாட்டில் உள்ள சுகாதார வளாகத்திற்கு பெண்கள் வர அச்சப்படுகின்றனர். எனவே கருவேல மரங்களை அகற்றி பழைய சுகாதார வளாகத்தையும் பயன்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.