ADDED : நவ 03, 2025 04:06 AM

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் ராஜாக்கள்பட்டி ஊராட்சி மறவபட்டியில் 10 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி பெண்கள் பயன்படுத்தும் வகையில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
போதிய பராமரிப்பு இல்லாத வளாகம் 2021ல் 15வது நிதிக்குழு மானிய நிதி ரூ.2 லட்சத்தில் பராமரிப்பு செய்தனர்.
அதன்பின்பும் இன்று வரை பயன்பாட்டுக்கு வரவில்லை. கழிப்பறை கட்டடம் சேதமடைந்து வருகிறது. சுகாதார வளாகத்திற்குள்ளேயும், வெளியேயும் மரம், செடி, கொடிகள் என புதர் மண்டிக்கிடக்கிறது.
இப்பகுதி பெண்கள் வளாகத்தை பயன்படுத்த முடியவில்லை. சுகாதார வளாகத்திற்குள் முகாமிடும் விஷப் பூச்சிகள் குடியிருப்பு வாசிகள் உட்பட அவ்வழியாக செல்வோரை அச்சுறுத்துகின்றன.
ஒன்றிய நிர்வாகத்தினர் வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

