/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றுங்கள் அதிகாரிகளே
/
கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றுங்கள் அதிகாரிகளே
ADDED : நவ 03, 2025 04:20 AM
உசிலம்பட்டி: திருமங்கலம் பிரதான கால்வாயில் செல்லம்பட்டி அருகில் ஒத்தப்பட்டிக்கு கிளைக்கால்வாய் பிரிந்து செல்கிறது. கால்வாய் வழியாக அந்தப்பகுதி விவசாயிகள் விளைநிலங்களுக்கு டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் செல்கின்றனர்.
இதற்கு கால்வாய்கரைகளே பாதையாக பயன்படுகிறது. கரைகள் செல்லும் வழியில் உள்ளவர்கள் பாதையை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியுள்ளதால் வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்றித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அப்பகுதி ஜோதிபாசு கூறியதாவது: கால்வாயில் தண்ணீர் வராத காலங்களில் வாகனங்கள் பக்கத்தில் உள்ள வயல்கள் வழியாகச் செல்கின்றன.
தற்போது தண்ணீர் திறந்து விவசாயப்பணிகள் நடப்பதால் வாகனங்கள் செல்ல ஆக்கிரமிப்புகள் இடையூறாக உள்ளது.
இது குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்ததால், கால்வாய் கரையை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றித்தரும்படி உத்தவு பிறப்பித்துள்ளனர்.
ஆனாலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி எதுவும் நடக்காததால் டிராக்டர், விவசாய இடு பொருட்கள் கொண்டு செல்ல சிரமமாக உள்ளது.
விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றித்தர வேண்டும் என்றார்.

