/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மின் பற்றாக்குறையால் இனி தொழில் தொடங்க முடியாது; கப்பலுார் சிட்கோவில் புதிய துணை மின்நிலையம் அமையுமா
/
மின் பற்றாக்குறையால் இனி தொழில் தொடங்க முடியாது; கப்பலுார் சிட்கோவில் புதிய துணை மின்நிலையம் அமையுமா
மின் பற்றாக்குறையால் இனி தொழில் தொடங்க முடியாது; கப்பலுார் சிட்கோவில் புதிய துணை மின்நிலையம் அமையுமா
மின் பற்றாக்குறையால் இனி தொழில் தொடங்க முடியாது; கப்பலுார் சிட்கோவில் புதிய துணை மின்நிலையம் அமையுமா
ADDED : ஜூலை 16, 2025 12:58 AM

திருமங்கலம் : தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய தொழிற்பேட்டையான கப்பலுார் சிட்கோவில் போதிய அளவு மின் விநியோகத்திற்கான அமைப்புகள் இல்லாததால் புதிதாக தொழில் தொடங்குவோருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இங்கு 550 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சிட்கோ தொழில்பேட்டையில் 550க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. அருகிலேயே மகளிர் தொழிற்பேட்டை, ஆட்டோமொபைல் தொழிற்பேட்டையும் உள்ளது.
இவ்விரண்டையும் சேர்த்தால் 700க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட துணை மின் நிலையம் உள்ளது. இதன் டிரான்ஸ்பார்மரில் இருந்து 90 சதவீதம் அளவிற்கு மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு விட்டன.
பொதுவாக டிரான்ஸ்பார்மர்களின் கொள்ளளவில் 50 முதல் 60 சதவீதம் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் சீரான மின் வினியோகம் இருக்கும். கப்பலுார் தொழிற்பேட்டையில் புதிதாக துணை மின் நிலையம் அமைக்க 4 ஆண்டுகளாக சிட்கோ தொழிலதிபர்கள் சங்கம் முயற்சி எடுத்து வருகிறது. துணை மின் நிலையம் அமைக்க 1.5 ஏக்கர் நிலமும் மின்வாரியத்திடம் ஒப்படைத்தது. ஆனால் போதிய நிதி வசதியின்றி துணை மின் நிலையம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
கப்பலுார் துணை மின் நிலைய கட்டுப்பாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதால் அதற்கென தனி துணை மின் நிலையம் அமைகிறது. எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரி வகுப்புகள் அடுத்தாண்டு முதல் செயல்பட உள்ளதால் அதற்கான மின் தேவையும் கப்பலுார் துணைமின் நிலையத்தையே சார்ந்துள்ளது.
இதனால் தொழிற்பேட்டையில் புதிதாக யாராவது தொழில் தொடங்கினாலோ அல்லது கனரக இயந்திரங்களை பொருத்த முயன்றாலோ அதற்கான மின் இணைப்பு கொடுப்பதற்கு வாய்ப்பே இல்லாமல் உள்ளது.
எனவே தொழிற்பேட்டையில் புதிய துணை மின் நிலையத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என தொழிலதிபர்கள் சங்கத் தலைவர் ரகுநாத ராஜா தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் திருமங்கலம் மின் செயற்பொறியாளரிடம் மனு அளித்துள்ளனர்.