ADDED : பிப் 08, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம், : திருமங்கலம் - மதுரை ரோடு ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் மிகவும் சுருங்கி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
இந்நிலையில் நேற்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ரோட்டை அகலப்படுத்துவதற்காக அளந்து கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். ரோடுகள் அகலப்படுத்தப்படுவதோடு, சாக்கடைகள் இடிக்கப்பட்டு மீண்டும் புதிதாக கட்டப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரோட்டை அகலப்படுத்தும் பணிக்கு முன்னதாக ஆக்கிரமிப்புகளை முதலில் அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

