நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தமிழ்நாடு பிராமணர் சங்கம் பழங்காநத்தம் வீரவாஞ்சிநாதன் கிளையின் சார்பாக 2025 ஆம் ஆண்டுக்கான காலண்டர் வெளியீடு நடந்தது.
முதல் பிரதியை மாநில ஆலோசகர் கணபதி நரசிம்மன் வெளியிட உறுப்பினர் உமாகுமார் பெற்றுக் கொண்டார். மாவட்ட தலைவர் ஜெயஸ்ரீ ஸ்ரீராம், கொள்கை பரப்புச் செயலாளர் ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினர்.
அன்னபூரணி, வசந்த கோகிலம், லட்சுமிகாளமேகம், உமா நடராஜன், கிருஷ்ணமூர்த்திசாந்தா, ராணி திரிபுரசுந்தரி பாஸ்கரன், பவானிசங்கர், கிருஷ்ணமூர்த்தி, மகாதேவன், நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கிளை செயலாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.