/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜாக்டோ ஜியோ சார்பில் பிரசாரம், ஆர்ப்பாட்டம்
/
ஜாக்டோ ஜியோ சார்பில் பிரசாரம், ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 17, 2025 02:07 AM
மதுரை: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று அரசு அலுவலகங்களில் கோரிக்கை அட்டை அணிந்து பிரசாரம், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1.4.2003 க்கு பின் பணியில் சேர்ந்தோருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை காட்டி 23.8.2010க்கு முன்பு பணியேற்ற ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலான 'டெட்' தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பெறுவோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
நேற்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகங்களில் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கோபி, அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நீதிராஜன் உட்பட பலர் ஊழியர்களிடம் கோரிக்கைகளை விளக்கினர். மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
வாடிப்பட்டி:: வாடிப்பட்டியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரபோஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பாரதி சிங்கம்: