நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லுாரியில் திருச்சி ஸ்ரீ ஜெயன் டெக்னாலஜி, சென்னை ராயல் என்பீல்டு நிறுவனங்கள் சார்பில் வளாகத் தேர்வு நடந்தது. செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். முதல்வர் ஆனந்தன் வரவேற்றார்.
நிறுவன அதிகாரிகள் சூரிய ஜோதி, ராஜேஷ், ஜாஸ்மின், நதியா தேர்வை நடத்தினர். 2025 பேட்ச் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுகளைச் சேர்ந்த 42 மாணவர்கள் தேர்வாகினர்.
துணை முதல்வர் சகாதேவன், துறைத் தலைவர்கள் பிரேம்குமார், ராஜேஷ் பிரபு, ஆதிராஜன், சிவனேசன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.

