/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
144 தடை உத்தரவு நேரத்தில் ஊர்வலம் செல்ல முடியுமா
/
144 தடை உத்தரவு நேரத்தில் ஊர்வலம் செல்ல முடியுமா
ADDED : பிப் 04, 2025 05:25 AM
மதுரை: மதுரை மாவட்டத்தில்நேற்று முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு தினத்தையொட்டி தி.மு.க.,வினர் ஊர்வலமாக சென்று அவரதுசிலைக்கு மாலை அணிவித்தனர்.
மதுரை நகரில் செயலாளர் தளபதி தலைமையில் தி.மு.க.,வினர் யானைக்கல்லில் இருந்து புறப்பட்டு நெல்பேட்டையில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தனர்.
மதுரை வடக்கு மாவட்டம் சார்பில் வாடிப்பட்டியில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தனர். தெற்கு மாவட்டத்தில் செயலாளர் மணிமாறன் அவரது அலுவலகத்தில் அண்ணாதுரை படத்திற்கு மாலை அணிவித்தார்.
திருப்பரங்குன்றம்மலை விவகாரம் தொடர்பாக நேற்றும், இன்றும் மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் ஊர்வலமாக தி.மு.க.,வினர் சென்றது குறித்து ஹிந்து அமைப்புகள் கேள்வி எழுப்பின.
இதுதொடர்பாக நமது நிருபரிடம் கலெக்டர் சங்கீதா கூறுகையில், ''இதுபோன்ற அனுமதிக்கு 7 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மத சம்பந்தமின்றி, ஏற்கனவே அனுமதி பெற்றவற்றுக்கு தடையில்லை என்று உத்தரவிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சில கிராமங்களில் கோயில் விழாக்களுக்கு அனுமதி பெற்றுஉள்ளனர். அது போன்றவற்றை நடத்தலாம், தடையில்லை என்று கூறியுள்ளோம்'' என்றார்.