ADDED : ஆக 18, 2025 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட நீர்வரத்து கால்வாய்கள் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
பேரையூர் தாலுகாவில் டி.கல்லுப்பட்டி, அத்திபட்டி, சேடப்பட்டி, மங்கல்ரேவு பகுதிகளில் நீர் வரத்து கால்வாய்கள் புதர் மண்டி தண்ணீர் செல்ல வழி இன்றி இருந்தது. மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் வரத்து கால்வாய்களை மண் அள்ளும் இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்ட பொறியாளர் பிரேம்ஆனந்த், இளநிலை பொறியாளர் சுந்தர்ராஜன் கண்காணிப்பில் செய்து வருகின்றனர்.

