/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டங்ஸ்டன் திட்டம் ரத்து: முத்தரசன் வலியுறுத்தல்
/
டங்ஸ்டன் திட்டம் ரத்து: முத்தரசன் வலியுறுத்தல்
ADDED : டிச 15, 2024 06:53 AM
மேலுார் : அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்ததற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நேற்று இ.கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் மக்களை சந்தித்தார்.
அவர் கூறியதாவது: மக்களின் உணர்வு மற்றும் வரலாற்று முக்கியத்துவத்திற்கு மதிப்பளித்து மத்திய அரசு அனுமதியை ரத்து செய்ய வேண்டும். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்களின் ஒருமித்த கருத்தாக மத்திய அரசு கருத வேண்டும்.
மக்களின் போராட்டத்திற்கு இ.கம்யூ., என்றும் துணை நிற்கும். வேதாந்தா, அதானி, அம்பானி போன்றோர் வாழ வேண்டும் என நினைக்கும் மத்திய அரசு சாதாரண மக்கள் குறித்து கவலை கொள்ளவில்லை. இவ்விவகாரத்தில் அண்ணாமலை உண்மை பேச வேண்டும். ஒற்றை விரலில் முடிக்க வேண்டிய விஷயத்தை அரசியல் செய்ய முயற்சிக்கிறார் என்றார்.