ADDED : செப் 30, 2025 04:19 AM
மதுரை: சர்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் மாரத்தான் ஓட்டம் நடந்தது.
எல்காட் ஐ.டி., பூங்காவில் தொடங்கிய ஓட்டத்திற்கு எஸ்.ஆர்., அறக்கட்டளை செயலாளர் காமினி குருசங்கர், மருத்துவமனை நிர்வாக அதிகாரி டாக்டர் கண்ணன், குழந்தைகளுக்கான ரத்தப் புற்றுநோயியல் துறைத்தலைவர் காசி விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் அன்னபூரணி, அனிதா, வெங்கடேஸ்வரன், குழந்தைப்பருவ புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள், அவர்களின் பெற்றோர்கள், டாக்டர்கள் ஆகியோர் ஓட்டத்தில் பங்கேற்றனர்.
டாக்டர் காசி விஸ்வநாதன் பேசுகையில் ''ரத்தப் புற்றுநோயுடைய 1000 குழந்தைகள், மூளைக்கட்டி உட்பட புற்றுநோய் கட்டியால் பாதிக்கப்பட்ட 700 குழந்தைகள் உட்பட 2500 குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். ஆபத்தான ரத்தக்கோளாறு, புற்றுநோயுடைய 400 பேருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது'' என்றார்.