UPDATED : அக் 09, 2026 06:38 PM
ADDED : அக் 09, 2026 06:36 PM
அ நிறம் | அளவு
மதுரை: இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், மதுரை பெட்கிராட் நிறுவனம் சார்பில் டிசைனர் மெழுகுவர்த்தி தயாரிப்பது குறித்த இலவச பயிற்சி எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் நடக்கிறது.
சோய் மெழுகு, ஜெல், டிசைனர் மெழுகுவர்த்தி தயாரிப்பு, திரி, வண்ணம், நறுமணப் பொருட்கள் தேர்வு, மோல்டிங், லேபிள் டிசைனிங், பேக்கிங் குறித்து தினமும் காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை 26 நாட்கள் பயிற்சி நடத்தப்படும். பெண்களுக்கு மட்டும் அனுமதி. உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவு சான்றிதழ், தொழில் துவங்க எஸ்.எஸ்.ஐ., சான்றிதழ், மாவட்ட தொழில் மையம் மூலம் காட்டேஜ் சான்றிதழ் தரப்படும். மத்திய, மாநில மானியத்துடன் வங்கிக்கடனுக்கு வழிகாட்டப்படும். அலைபேசி: 90950 54177.
