UPDATED : அக் 09, 2026 06:38 PM
ADDED : அக் 09, 2026 06:36 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் தமிழ்நாடு காந்தி நினைவு நிதி, காந்திய சிந்தனை கல்லுாரி சார்பில் காந்தி ஜெயந்தி விழா நடந்தது.
முதல்வர் சேதுராக்காயி வரவேற்றார். இயக்குநர் ஆண்டியப்பன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்வர் முத்துலட்சுமி, வங்கி அலுவலர் (ஓய்வு) மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தனர். காந்திய சிந்தனை சான்றிதழ், டிப்ளமோ படித்தவர்களுக்கு நினைவு நிதி செயலாளர் ராஜேந்திரன் சான்றிதழ் வழங்கினார். மியூசிய செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், முதல்வர் தேவதாஸ், யாதவா கல்லுாரி பேராசிரியை சுதா கலந்து கொண்டனர்.
