நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : திண்டுக்கல் நெல்லுார் காசிராஜன்,44. செம்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இவரை மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் 2018ல் கைது செய்தனர். 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மதுரை இனக்கலவர தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயக்குமாரி ஜெமிரத்னா உத்தரவிட்டார். ஏற்கனவே ஜாமினில் வெளியே வந்த காசிராஜன் தலைமறைவானதால் பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி.