ADDED : ஜன 09, 2026 06:18 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ., குருசாமி 65, இவர் நேற்று மருமகனுடன் மதுரை தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தார்.
திருமங்கலம் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் மேலக்கோட்டை விலக்கு அருகே வந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து புகை வருவதை கண்ட குருசாமி, காரை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். காரின் முன் பகுதியில் தீ பற்றி எரிந்தது. திருமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை.
