ADDED : பிப் 08, 2026 06:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலூர் மணப்பட்டி விவசாயி பூவை ராஜன் 40, நேற்று மாலை காரில் தும்பைபட்டி சர்வீஸ் ரோட்டில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த டூவீலர்கள் மீது மோதியது.
கார் நிலை தடுமாறி வருவதை பார்த்த மக்கள் அலறி அடித்து ஓடினர். அதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. கார் கடைக்குள் புகுந்து நின்றது. மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

