ADDED : ஜன 20, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப்பிரிவு வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை சார்பில் வங்கித் துறையில் வாய்ப்புகள் என்ற தலைப்பில் தொழில் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குநர் பிரபு முன்னிலை வகித்தனர். மாணவி பிரியதர்ஷினி வரவேற்றார். மதுரை சாப்ட் ஸ்கில் ட்ரைனிங் அகாடமி பயிற்சி இயக்குநர் முருகேசன் பேசினார். மாணவி ஷானு நன்றி கூறினார். வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறைத் தலைவர் நாகசுவாதி, உதவி பேராசிரியர்கள் மஞ்சுளா, ராஜாமணி ஒருங்கிணைத்தனர்.