UPDATED : அக் 31, 2026 11:42 PM
ADDED : அக் 31, 2026 06:26 PM

மதுரை: தற்காலிக ஒப்பந்த முறையில் பணி செய்யும் செவிலியர்களை மருத்துவ தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.) மூலம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மதுரையில் நடந்த செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மாநிலத் தலைவர் சசிகலா தலைமை வகித்தார். பொருளாளர் ஹேமச்சந்திரன், பொதுச்செயலாளர் சுபின், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தமிழ், பொருளாளர் பரமசிவன், நகராட்சி,மாநகராட்சி சுகாதார செவிலியர் சங்க மாநிலத் தலைவர் பஞ்சவர்ணம், அரசு மருத்துவ ஆய்வக நுட்புனர் சங்க மாவட்ட பொருளாளர் சிவகுரும்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 6500 செவிலியர்களை காலமுறை ஊதியத்திலும் தற்காலிக ஒப்பந்த முறையில் பணி செய்யும் செவிலியர்களை எம்.ஆர்.பி மூலமும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். புதிதாக உருவாக்கப்படும் செவிலியர் பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தவேண்டும் என்ற கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
