ADDED : செப் 21, 2024 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் வீட்டு முன் நிறுத்தி வைத்திருந்த 2 கார்கள் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்.
மதுரை ஆனையூர் சங்கீத்நகரை சேர்ந்தவர் பாபு. மருத்துவ பிரதிநிதியாக உள்ளார். இவரது வீட்டின் முன் இருந்த ஷெட்டில் அவரது அண்ணனுக்கு சொந்தமான விலை உயர்ந்த கார்களை நிறுத்தி வைத்திருந்தார். நேற்று மதியம் ஒரு கார் தீப்பற்றி எரிந்தது. சில நொடிகளில் அருகே இருந்த காருக்கும் தீ பரவியது.
தல்லாகுளம் தீயணைப்பு நிலைய வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். வெயில் தாக்கமா, மின்கம்பிகள் உரசியது காரணமா என கூடல்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.