/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க., பிரமுகர் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு
/
தி.மு.க., பிரமுகர் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு
ADDED : செப் 23, 2024 07:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி, : உசிலம்பட்டி அருகே கரையாம்பட்டியைச் சேர்ந்த சுதா 45, குடும்பத்திற்கும் அருள் சிவக்குமாருக்கும் பூர்வீக தோட்டம் சம்மந்தமாக முன் விரோதம் இருந்தது.
தோட்ட வீட்டில் சுதா இருந்தபோது, கருக்கட்டான்பட்டி பாண்டியம்மாள், செக்கானுாரணி கொடிசந்திரசேகர், உசிலம்பட்டி ஆனந்தன், அருள்சிவக்குமார் உள்ளிட்ட 15 பேர் அவருடன் இடம் தொடர்பாக வாக்குவாதம் செய்து தாக்கினர். உசிலம்பட்டி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள சுதாவின் புகாரின் பேரில் போலீசார் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். கொடிசந்திரசேகர் தி.மு.க., மாநில விவசாயிகள் அணி துணை அமைப்புச் செயலாளராக உள்ளார்.